fbpx

சூட்டோடு சூடாக ராதாரவி சம்பவத்தை இழுத்துவிட்ட சின்மயி..!! இதை மட்டும் ஏன் கண்டிக்கல..?

தற்போது சினிமா திரையுலகில் மிகவும் விவாதப் பொருளாக மாறியுள்ள விஷயம் தான் மன்சூர் அலிகான் – த்ரிஷா விவகாரம். மன்சூர் அலிகான், த்ரிஷாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று நடிகர் சங்கத்தினர் உள்ளிட்டோர் கேட்டு வருகின்றனர். ஆனால், தன்னால் மன்னிப்புக் கேட்க முடியாது என்று மன்சூர் அலிகான் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், பிரபல பாடகி சின்மயி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், அனைவரும் மன்சூர் அலி கானை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதில் தற்போது நிறைய மாற்றம் தெரிகிறது. உண்மையில் இது ஒரு நல்ல விஷயம் தான். சாக்கடையை புறக்கணிப்போம் என்று சொல்வதை விடுத்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்வது அவசியம் என்று அதிகாரத்தில் உள்ளவர்கள் பார்க்கிறார்கள். ஆனால், நயன்தாரா தனது சொந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது ராதாரவி அவரை அவதூறாக பேசினார்.

அவர் பேசி இரண்டு நாட்கள் ஆனபோதும் கூட இதை யாரும் கண்டிக்கவில்லை, நடவடிக்கையும் எடுக்கவில்லை. மன்னிப்பு கேட்கவில்லை. தேசிய மகளிர் ஆணையம் தானாக முன் வந்து விசாரிக்கவில்லை. அப்போது திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர், பாஜகவில் இணைந்து மீண்டும் நயன்தாராவை அவதூறாகப் பேசினார். அப்போதும் தேசிய மகளிர் ஆணையம் அதை கண்டு கொள்ளவில்லை. சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், த்ரிஷா விவகாரத்தில் பலரும் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Chella

Next Post

ரூ.1,000 உரிமைத்தொகை மேல்முறையீடு..!! கவலைப்படாதீங்க..!! பணி தொடங்கியாச்சு..!!

Wed Nov 22 , 2023
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 மாதந்தோறும் தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ரூ.1,000 கிடைக்காதவர்கள் தொடர்ந்து மேல்முறையீடு செய்து வருகின்றனர். இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மேல்முறையீடு செய்துள்ளனர். அதன்படி, மேல்முறையீடு செய்யப்பட்டு புதிதாக 7.35 லட்சம் பயனாளிகள் நவம்பர் மாதம் முதல் இத்திட்டத்தில் மேலும் இணைக்கப்பட்டு தற்போது மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பெண்கள் இத்திட்டத்தின் […]

You May Like