fbpx

என்னது கடனை திருப்பி கொடுக்காவிட்டால் சாக்லேட் குடுப்பாங்களா??

பொதுவாக நாம் கடன் தவணையை திரும்பி கொடுக்காவிட்டால் அடி உதை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இல்லையென்றால் நம் வீட்டில் இருக்கும் பொருள்கள் வெளியே பறக்க கூட வாய்ப்பு உள்ளது. ஆனால் எங்காவது சாக்லேட் கிடைக்குமா?? இனி கிடைக்கும்.. ஆம், கடன் தவணையை உரிய தேதியில் திருப்பி கொடுக்காத வாடிக்கையாளர்களின் வீட்டிற்க்கு சென்று ‘சாக்லேட்’ கொடுக்கும் நூதன திட்டத்தை இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) செயல் படுத்த தொடங்கி உள்ளது.

இதுகுறித்து வங்கி வட்டாரங்கள் தெரிவித்ததாவது:- கடனைத் திருப்பிச் செலுத்த மாதாந்திர தவணைக் காலம் கடந்த பிறகு, மாதாந்திர கடன் தொகையைச் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு போன் செய்தால் அழைப்புகளை வாடிக்கையாளர்கள் எடுப்பதில்லை. இப்படி அழைப்புகளை ஏற்காமல் இருப்பது, அவர்களுக்கு கடனைத் திருப்பி செலுத்தும் எண்ணம் இல்லை என கருதப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்களிடம் இருந்து கடன் தவணையை வசூலிப்பதற்கு, அவர்களது வீட்டிற்க்கோ அல்லது அலுவலகத்துக்கோ முன்னறிவிப்பின்றி நேரில் செல்வதே சிறந்த வழி. அதற்காக, வசூல் அதிகாரிகளை கடன் தொகையை திரும்பி கொடுக்காத வாடிக்கையாளர்களின் வீட்டிற்க்கு சாக்லேட்டுகளுடன் அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் எஸ்.பி.ஐ.யின் சில்லரை கடன் அளிப்பு ரூ.12,04,279 கோடியாக உள்ளது. இது, முந்தைய 2022-23-ம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 16.46 சதவீதம் அதிகம் ஆகும். அப்போது வங்கியின் சில்லரைக் கடன் அளிப்பு ரூ.10,34,111 கோடியாக இருந்தது.

Maha

Next Post

"பயில்வான் ரங்கநாதனை உயிரோட கொளுத்த வேண்டும்" பிரபல நடிகர் ஆவேச பேட்டி..

Sat Sep 23 , 2023
பல காலம் சினிமா துறையில் இருக்கிறேன் எனக்கு எல்லாம் தெரியும் என தொடர்ந்து சொல்லிக்கொண்டு கண்டதை பேசுபவர் தான் பயிவான் ரங்கநாதன். இவரின் எரிச்சலூட்டும் பேச்சுக்கு பலர் அமைதியாக இருந்தாலும் சிலர் தக்க பதிலடி கொடுக்கின்றனர். இதற்கிடையே விஷாலுக்கும் லட்சுமி மேனனுக்கும் காதல் என்று தொடர்ந்து பேசப்பட்ட நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்த விஷால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், லட்சுமி மேனன் நடிகை என்பதை தாண்டி ஒரு பெண். அவரை […]

You May Like