fbpx

கொலஸ்ட்ராலை குறைக்க வந்துவிட்டது தடுப்பூசி!… புதிய ஆய்வில் தகவல்!… இதுல ஒரு ஸ்பெஷல் இருக்கு!

கொலஸ்ட்ராலை குறைக்க புதிய தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலக அளவில் இதயம் சார்ந்த நோய்களால் ஆண்டுதோறும் 18 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர் என்று உலக சுகாதார ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது. இதுகுறித்து நியூ மெக்ஸிகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிரைஸ் சேகரியான் கூறுகையில், “கொலஸ்ட்ரால் பிரச்சினைக்கு மிகக் குறைவான செலவில் தீர்வு காண நாங்கள் மிக ஆர்வமாக இருக்கிறோம். அதே சமயம், அது எல்லோருக்கும் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

அமெரிக்காவில் மட்டுமல்லாமல், இதுபோன்ற வசதிகள் கிடைக்காத பல நாடுகளுக்கும் இது கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஏனென்றால் இது விலை உயர்ந்த ஆய்வு நடவடிக்கையாக அமைகிறது’’ என்று தெரிவித்தார். புதிய தடுப்பூசியானது PCSK9 இன்ஹிமிட்டர் என்ற பெயரில் இந்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை நம் உடலில் செலுத்தும்போது, அது PCSK9 அளவை குறைக்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறது. ஏனென்றால் PCSK9 என்பது எந்த அளவுக்கு கூடுதலாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு நம் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகள் மிக அதிகமாக இருக்கும்.

இதுகுறித்து இதயநல மருத்துவர் அபினாஷ் அச்ரேகர் கூறுகையில், இந்த தடுப்பூசியை மாதம் இரண்டு முறை செலுத்திக் கொண்டதன் அடிப்படையில் கெட்ட கொலஸ்ட்ராலை ஏற்படுத்துகின்ற புரதம் தடுக்கப்பட்டது. அந்த வகையில் என்னுடைய கெட்ட கொலஸ்ட்ரால் அளவு 60 சதவீதம் வரையில் குறைந்தது. ஆனால், இந்த தடுப்பூசி விலை உயர்ந்தது. அத்தியாவசிய மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவர் அல்லது இதய நோய் மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் தான் இதைச் செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

தடுப்பூசியில் தொற்று ஏற்படுத்தாத வைரஸ் ஒன்று இடம்பெறுகிறது. இந்த வைரஸின் வெளிப்புற ஓட்டின் மீது கெட்ட கொலஸ்ட்ராலை ஏற்படுத்துகின்ற PCSK9 புரதம் ஒட்டிக் கொள்ளும். இந்த சமயத்தில் நம் உடல் மிகுதியான நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். அதன் எதிரொலியாக கொலஸ்ட்ரால் அளவுகள் கட்டுக்குள் வரும். இருப்பினும் ஆரோக்கியமான, சீரான உணவுப் பழக்கங்கள், தினசரி உடற்பயிற்சி போன்ற வாழ்வியல் நடைமுறைகளின் மூலமாக கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதே இயல்பானது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Kokila

Next Post

2024 சனிப்பெயர்ச்சி: இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு தான் கொண்டாட்டம்.!

Wed Dec 27 , 2023
வருகின்ற புத்தாண்டில் பல ராஜ யோகங்கள் நடைபெற இருக்கின்றன. சனிபகவானின் இடப்பெயர்ச்சி மற்றும் குரு இடப்பெயர்ச்சி ஆகியவை 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பல மாற்றங்களை கொண்டு வரப் போகிறது. வர இருக்கின்ற 2024 ஆம் ஆண்டில் சனிபகவானின் இடப்பெயர்ச்சியால் திரிலோக ராஜயோகம் நடைபெற உள்ளது. இந்த ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் அடிக்க போகும் மூன்று ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். சனி மற்றும் குருவின் இடப்பெயர்ச்சி 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் […]

You May Like