ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடைபெறும். மேலும், வருகிற ஜனவரி 1ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டையும் கிறிஸ்தவர்கள் வரவேற்கத் தயாராக உள்ளனர். இதையொட்டி, பண்டிகைக் காலம் தொடங்கி விட்டதன் அடையாளமாகவும், இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அறிவிக்கும் விதமாகவும், கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளின் முகப்பில் கிறிஸ்துமஸ் மரங்கள் அமைத்து, ஸ்டார்களையும், குடில்களையும் அமைத்து கிறிஸ்துமஸ் விழாவினைக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் முறை முதல் முதலில் எந்த நாட்டில், எதற்காக, யாரால் துவங்கப்பட்டது என பலருக்கும் தெரியாது. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.. வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக சேர்ந்து கிறிஸ்துமஸ் மரத்தில் பல வண்ணங்களில் மணிகள், பந்துகள், விளக்குகள் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு விதமாவிதமாக அலங்காரம் செய்வார்கள். மார்டின் லூதர் என்பவர் தான் கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்கி, அலங்கரிக்கும் பழக்கத்தை கிறிஸ்துவர்களிடையே அறிமுகம் செய்தார்.
அவர் ஒருநாள் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, எப்போதும் வாடாமல் இருக்கும் கரும்பச்சை நிற மரங்களுக்கு இடையே நட்சத்திரங்கள் இருப்பதை கண்டார். வீட்டிற்கு வந்த அவர், தான் கண்ட காட்சிகளை தனது பிள்ளைகளிடம் பகிர்ந்து கொண்டார். இந்த காட்சி தனக்கு இயேசு கிறிஸ்துவை நினைவுப்படுத்துவதாக கூறி உள்ளார். பிறகு தனது இந்த அனுபவத்தை தேவாலயதத்தில் இருப்பவர்களிடமும் பகிர்ந்துள்ளார். இந்த தகவல் மெல்ல மெல்ல பரவி, வீட்டில் எப்போதும் வாடாமல் இருக்கும் மரங்களில் விளக்குகளை வைத்து அலங்கரித்தால் இயேசு கிறிஸ்துவே அந்த வீட்டிற்கு வந்திருப்பதாக அர்த்தம் என மக்கள் கருத துவங்கினர்.
அதனால் காலப் போக்கில் கிறிஸ்துமஸ் மரம் என்பது இயேசு கிறிஸ்துவின் அடையாளமாக உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கருதத் துவங்கினர். இது மெல்ல மெல்ல மற்ற பகுதிகளுக்கும் பரவியது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டமே தீமைகள் விலகி, நன்மைகள் வீட்டிற்கு வருவதன் அடையாளமாக கருதப்பட்டது. கிறிஸ்துமஸ் மரம் அதிக அளவில் பிரபலமானது 16ம் நூற்றாண்டில் தான். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக முதன் முதலில் கிறிஸ்துமஸ் மரத்தை ஒரு அடையாளமாக வைத்து கொண்டாடிய நாடு ஜெர்மனி தான் என சொல்லப்படுகிறது.
Read more ; தீவினைகள் நீங்கி.. திருமணத் தடையை விலக்கும் அகத்தியான்பள்ளி அகத்தீஸ்வரர்..!! எங்க இருக்கு தெரியும்?