சினிமாவில் நடிக்க அட்ஜஸ்ட்மெண்ட் செய்யும் பழக்கம் அதிகரித்து வருவதாக பலரும் கூறி வருகின்றனர். அந்தவகையில், நடிகைகள் பலர் வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய கேட்டார்கள் என்று வெளிப்படையாக பகிர்ந்தும் வருகின்றனர். அந்த வகையில், குறும்படங்கள், விளம்பரங்களில் நடித்து பிரபலமான நடிகை தீபா பாலு வெளிப்படையாக சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ஹீரோயின் வாய்ப்புகள் வந்தால் அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணனும் என்ற விஷயங்கள் இருக்கு. என்னோட தோழிகளுக்கு இந்த சம்பவம் நடந்திருக்கிறது. நான் அதை சந்திக்கவில்லை. ஆடிஷன் போனாலும் பலரிடம் விசாரித்தப்பின் தான் நான் போகிறேன் என்று கூறியிருக்கிறார். பெரிய படத்தில் நடிக்கணும் என்று அப்படி கேட்டிருக்கிறார்களா என்ற கேள்விக்கு அப்படியெல்லாம் என்னிடம் சொன்னதில்லை என்று தீபா பாலு கூறியுள்ளார்.
Read More : தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..!! அதி கனமழை வெளுத்து வாங்கப்போகுது..!! எங்கெங்கு தெரியுமா..?