தேசிய சினிமா தினத்தை கொண்டாடும் வகையில் நாளை ஒரு நாள் மட்டும் சினிமா டிக்கெட் விலை ரூ.75 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது..
செப்டம்பர் 23-ம் தேதி தேசிய சினிமா தினத்தைக் மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா கொண்டாடுகிறது. இந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில், நாட்டில் உள்ள 4000 திரையரங்குகளில் ரூ.75 என்ற விலையில் சினிமா டிக்கெட்களை வாங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. முன்னதாக, தேசிய சினிமா தினம் செப்டம்பர் 16 அன்று கொண்டாட முடிவு செய்யப்பட்டது, ஆனால் அது ஒத்திவைக்கப்பட்டது.
வழக்கமான நாட்களில், திரையரங்குகளில் ஒரு திரைப்பட டிக்கெட்டின் விலை ரூ.120 முதல் 500 வரை இருக்கும். மேலும் நீங்கள் பிரீமியம் மற்றும் சாய்வு இருக்கைகளை தேர்வு செய்தால், ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை வசூலிக்கப்படும். ஆனால் தேசிய சினிமா தினத்தில் ஒரு திரைப்படத்திற்கு ரூ.75 என்ற விலையில் டிக்கெட் வாங்கலாம்..
இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்திய மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா “ இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில், தேசிய சினிமாவைக் குறிக்கும் வகையில் 75 ரூபாய் என்ற சிறப்பு சலுகையில் டிக்கெட் கிடைக்கும்.. தேசிய சினிமா தினம் செப்டம்பர் 16 ஆம் தேதி நடத்தப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், பல்வேறு ‘பங்குதாரர்களின்’ கோரிக்கை மற்றும் பங்கேற்பை அதிகரிக்க, அது இப்போது செப்டம்பர் 23 ஆம் தேதி நடத்தப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
PVR, INOX, Cinepolis, Carnival, Miraj, Citypride, Asia, Mukta A2, Movie Time, Wave, M2K, Delite உள்ளிட்ட மல்டிபிளக்ஸ்கள் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு தற்போது ரூ.75க்கு ஓடும் திரைப்படங்களுக்கான திரைப்பட டிக்கெட்டுகளை வழங்குகின்றன.
75 ரூபாய்க்கு ஆன்லைனில் டிக்கெட் புக் செய்வது எப்படி..?
- PVR அல்லது Wave போன்ற மல்டிபிளக்ஸ்களின் இணையதளம் அல்லது செயலிகளை பார்வையிடவும்.
- உங்கள் விவரங்களுடன் பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்.
- உங்கள் நகரத்தையும் உங்கள் பகுதியில் உள்ள தியேட்டரையும் தேர்ந்தெடுக்கவும்.
- நீங்கள் பார்க்க விரும்பும் திரைப்படத்தைத் தேடித் தேர்ந்தெடுக்கவும்.
- இப்போது நேரத்தைத் தேர்ந்தெடுத்து, UPI, இணைய வங்கி அல்லது பிற முறைகள் மூலம் பணம் செலுத்த proceed என்பதை கிளிக் செய்யவும்.