வட்ட அளவிலான ஓய்வூதிய குறை தீர்க்கும் முகாம் 22.03.2024 (வெள்ளிக்கிழமை) அன்று பகல் 11:00 மணியளவில் சென்னையில் உள்ள தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில் காணொளி காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வட்ட அளவிலான ஓய்வூதிய குறை தீர்க்கும் முகாம் 22.03.2024 (வெள்ளிக்கிழமை) அன்று பகல் 11:00 மணியளவில் சென்னையில் உள்ள தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில் காணொளி காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது. ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் சம்மந்தப்பட்ட குறைகளை முதன்மை அஞ்சல் துறை தலைவர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம் சென்னை என்கிற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் bgt.tn@indiapost.gov.in என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ 08.03.2024 மதியம் 03:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் பெறப்பட்ட ஓய்வூதியம் தொடர்பான மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு காணொளி காட்சிக்கான இணைப்பு (Meeting link) உரிய நபர்களுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary: Post office Circle Level Pension Grievance Redressal Camp