fbpx

’இரண்டே நாளில் ரூ.464 கோடியை செலவு செய்த குடிமகன்கள்’..!! ’அரசாங்கத்துக்கு அமோக கலெக்‌ஷன்’..!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.464 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 22ஆம் தேதி அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 45 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக திருச்சி மண்டலத்தில் 41 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 40 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 39 கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளன. மேலும், சென்னை மண்டலத்தில் 38 கோடி ரூபாய் என மொத்தமாக 205  கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது.

’இரண்டே நாளில் ரூ.464 கோடியை செலவு செய்த குடிமகன்கள்’..!! ’அரசாங்கத்துக்கு அமோக கலெக்‌ஷன்’..!!

இதே போல தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளில், அதிகபட்சமாக மதுரையில் 55 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதே போல சேலம் மண்டலத்தில் 52 கோடி ரூபாய்க்கும், சென்னை மண்டலத்தில் 51 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 50 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 48 கோடி ரூபாய் என 258 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு கடந்த ஆண்டை விட இந்தாண்டு ரூ.33 கோடி அதிகமாக மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

ஆபத்து..!! ப்ளே ஸ்டோரில் இருந்து 16 செயலிகள் அதிரடி நீக்கம்..!! ஏன் தெரியுமா?

Mon Oct 24 , 2022
பயனர்களின் சாதனங்களில் இருந்து அதிக இணையத்தை பயன்படுத்தி, சார்ஜை வேகமாக குறைக்கும் 16 ஆண்ட்ராய்டு செயலிகளை Google Play Store நீக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிரபல Ars Technica இன் அறிக்கையின்படி, பாதுகாப்பு நிறுவனமான McAfee ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களில் சார்ஜை குறைக்கும் அளவிற்கு செயலிகள் இருக்கிறது என கண்டறிந்தது. இதனையடுத்து கூகுள் நிறுவனம் Google Play Store-இல் இருந்து 16 செயலிகளை நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அப்படி […]
ஆபத்து..!! ப்ளே ஸ்டோரில் இருந்து 16 செயலிகள் அதிரடி நீக்கம்..!! ஏன் தெரியுமா?

You May Like