கிராம சபை கூட்டங்கள் போல, தமிழகம் முழுவதும் நவம்பர் 1-ம் தேதி நகர சபை மற்றும் மாநகர சபை கூட்டங்கள் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சி பகுதியில் நடைபெறும் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
அதில், நகராட்சிகளின் 2022-23-ம் ஆண்டின் வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, மத்திய மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், குழந்தைகள் மற்றும் முதியோர் உதவி எண் மற்றும் இளைஞர்களுக்கான திறன் பயிற்சி உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.