fbpx

அடுத்தடுத்து நிராகரிக்கப்படும் Claim கோரிக்கை!… PF தொகை எடுக்க முடியாமல் பயனர்கள் தவிப்பு!… அதிகாரிகள் கூறுவது என்ன?

PF: வருங்கால வைப்பு நிதியின் இறுதி செட்டில்மெண்ட் தொகை நிராகரிக்கப்படுவதற்கு ஆன்லைன் முறையிலான நடைமுறைகளே முக்கிய காரணமாக உள்ளது என்று EPFO அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி வாரியத்தில் ஊழியர்கள் தங்கள் மாதாந்திர சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீத தொகையை சேமிப்பாக செலுத்தி வருகின்றனர். இதனுடன் ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனத்தின் சார்பாகவும் குறிப்பிட்ட தொகை மாதம் தோறும் வரவு வைக்கப்படுகிறது. இந்த தொகையானது ஊழியர்களின் எதிர்பாராத மற்றும் திடீர் செலவுகளுக்கு கிளைம் செய்து கொள்ளும் வசதிகள் உள்ளது. இதுவரையிலும் 277 மில்லியன் பேர் EPFO அமைப்பில் சுமார் 20 லட்சம் கோடி தொகையை செலுத்தியுள்ளனர். சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் ஈ பி எஃப் ஓ அமைப்பிடம் வைக்கும் கிளைம் கோரிக்கைகள நிராகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சராசரியாக 20 நாட்களுக்குள் PF தொகையை விடுவிக்க எடுத்துக் கொள்ளும் அமைப்பு தற்போது அதை தாண்டிய பிறகும் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 2022 – 23 ம் ஆண்டில் 73.87 லட்சம் PF கோரிக்கைகள் வைக்கப்பட்டதில் 33.8% அதாவது 24.93 லட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 46.66 லட்சம் மனுக்களுக்கு மட்டுமே தீர்வாளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது இறுதி செட்டில்மெண்ட் தொகையை விண்ணப்பிக்கும் 3-ல் ஒருவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது.

இது குறித்து EPFO அதிகரிகள் கூறுகையில், வருங்கால வைப்பு நிதியின் இறுதி செட்டில்மெண்ட் தொகை நிராகரிக்கப்படுவதற்கு ஆன்லைன் முறையிலான நடைமுறைகளே முக்கிய காரணமாக உள்ளது. இதற்கு முன்பாக ஆவணங்கள் சரிபார்ப்பு ஆகியவை ஊழியர்கள் வேலை செய்யும் நிறுவனங்களே மேற்கொள்ளும். இறுதியாக இபிஎப்ஓ அலுவலகத்திற்கு வரும். ஆனால் தற்போது 99 சதவிகிதம் ஆதார் சான்று மூலமாக மேற்கொள்ளப்படுகிறது. இதனால், ஆவணங்களில் உள்ள சிறு சிறு வேறுபாடுகள் கூட நிராகரிப்புக்கு காரணமாக அமைந்து விடுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

English Summary: PF | EPFO officials said online procedures are the main reason for rejection of final settlement amount of provident funds.

Readmore: மரத்தை கட்டியணைத்து சாதனை!… எதற்காக தெரியுமா?… சுவாரஸிய தகவல்!

Kokila

Next Post

Prostitution | ’நல்ல சம்பளம் கிடைக்கும்’..!! தாய்லாந்து பெண்களை வரவழைத்து விபச்சார தொழில்..!! ஐடி நிறுவனங்கள் டார்கெட்..!!

Mon Feb 26 , 2024
தாய்லாந்தை சேர்ந்த இளம்பெண்களை ஏமாற்றி இந்தியா அழைத்து வந்து மசாஜ் பார்லர் என்ற பெயரில் விபச்சாரத்தில் ஈடுபட வைத்த சம்பவம் பெங்களூருவில் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 7 தாய்லாந்து இளம்பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் பிரபல ஐடி நிறுவனங்கள் உள்பட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கர்நாடகா மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து […]

You May Like