fbpx

கவனம்…! ரயில்வே பாதுகாப்பு படையில் 9,000 காலியிடங்கள்…! வெளியான அறிவிப்பு…! உண்மை என்ன…?

ரயில்வே பாதுகாப்புப் படையில் 9,000 உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பணிநியமனம் செய்யப்படுவது தொடர்பாக சமூக ஊடகங்கள் மற்றும் சில அச்சு ஊடகங்களில் தவறான தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பான அறிவிப்பு எதுவும் ரயில்வே அமைச்சகத்தாலோ அல்லது ரயில் பாதுகாப்புப் படையாலோ வெளியிடப்படவில்லை. இவற்றில் இணையதளங்கள் மூலமாகவோ அல்லது அச்சு மின்னணு ஊடகங்கள் மூலமாக எந்த அறிவிக்கையும் வெளியிடப்படவில்லை என்று பிஐபி விளக்கம் அளித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் போலி செய்திகள் ஒருபக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.. இதனை தடுக்கும் விதமாகப் பத்திரிகை தகவல் பணியகம் டிசம்பர் 2019 இல் இந்த உண்மைச் சரிபார்ப்புக் குழுவைத் தொடங்கியது. அதன் நோக்கம், பல்வேறு சமூக ஊடக தளங்களில் பரவி வரும் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான தவறான தகவல்களை அடையாளம் காணப்பட்டு, அதனுடைய உண்மைத்தன்மையை மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாக உருவாக்கப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

தினமும் ரூ.1,000 ஊதியம்...! வரும் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்...! என்னென்ன தகுதிகள்...?

Wed Apr 12 , 2023
அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர்கள் மூலம் ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க ஆற்றுப்படுத்துநருக்கான பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; காஞ்சிபுரம்‌ அரசு குழந்தைகள்‌ இல்லத்தில்‌ ஆற்றுப்படுத்துநர்கள்‌ மூலம்‌ ஆற்றுப்படுத்துதல்‌ சேவை வழங்க ஆற்றுப்படுத்துநருக்கான 2 பணியிடங்கள்‌ மதிப்பூதிய அடிப்படையில்‌ நிரப்பப்பட உள்ளது. இப்பதவிக்கு விருப்பமுள்ள மற்றும்‌ தகுதியான உளவியல்‌ மற்றும்‌ ஆற்றுப்படுத்துதலில்‌ முதுகலைப்‌ பட்டம்‌ பெற்ற நபர்கள்‌, 25 வயது […]
தமிழக கால்நடைத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

You May Like