சேலம் பெண்கள் கிளைச்சிறையில் ’லெஸ்பியன்’ விவகாரத்தில் 2 பெண் வார்டன்கள் முடியை பிடித்து இழுத்து சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்ட பெண்கள் கிளைச்சிறையில் 45-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு 3 ஷிப்ட் அடிப்படையில் வார்டன்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் கடந்த சில வாரத்திற்கு முன்பு வெடித்தது. இது தொடர்பாக கட்டுப்பாட்டு அதிகாரியான மத்திய சிறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில், சிறையில் சில வார்டன்களிடையே ‘லெஸ்பியன்’ பழக்கம் தொடர்பாக நடந்த அடிதடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்தான வார்டன் ஒருவரும், கணவரை பிரிந்து வாழும் வார்டன் ஒருவரும் ஒன்றாக வசித்துள்ளனர். இருவருக்குமிடையே லெஸ்பியன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விவாகரத்தான வார்டன், இன்னொரு புது வார்டனுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதனால், கணவரை பிரிந்து வாழும் வார்டன் கடும் அதிர்ச்சிக்கு ஆளானார். என்னுடன் தான் பழக வேண்டும், பேச வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார். ஆனால் புதுப்பழக்கத்தை அவரால் கைவிட முடியவில்லை. இவரை தொடர்ந்து புறக்கணித்து வந்துள்ளார். இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே சிறைக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ’என் இஷ்டப்படி நான் யாரிடமும் பேசுவேன். நீ எப்படி கேட்கலாம்’ என விவாகரத்து வார்டன் கூறியுள்ளார். அப்போது, திடீரென இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் முடியை பிடித்து இழுத்து சண்டையிட்டுள்ளனர். சக வார்டன்கள் ஓடி வந்து சண்டையை விலக்கிவிட்டுள்ளனர்.
இதில் விவாகரத்தான வார்டனுக்கு முகம், கைகளில் நகக்கீறல் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. இந்த மோதல் விவகாரம் சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வார்டன்கள் கூறுகையில், ”இரு வார்டன்களும் இரவு நேரங்களில் சிறையிலேயே உறவு வைத்துக்கொள்கின்றனர். தங்களுக்கு நீதிமன்றமே அனுமதி வழங்கிவிட்டதாக கூறிவருகின்றனர். இந்நிலையில்தான் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் கைதிகளை பார்க்க வரும் உறவினர்களிடம் பணம் வசூலித்து உயரதிகாரிக்கு கொடுத்து வருகிறார். இதனால், இந்த சண்டையை அவர் கண்டு கொள்ளவில்லை’ என்றனர். இதுகுறித்து சிறை விஜிலென்ஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.