உத்தரபிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் சிவம்(7) என்ற 2-ம் வகுப்பு மாணவன் சக மாணவர்களுடன் சண்டையிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சண்டையின் போது சக மாணவர்கள் நெஞ்சில் குதித்ததில் சிறுவன் உள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், இந்நிலையில் கடந்த செவ்வாய் அன்று சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் அறிக்கை கிடைத்ததும், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை முடிந்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.