fbpx

7ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம்..!! 2 குழந்தைகளுக்கு தந்தையான நபர் போக்சோவில் கைது..!!

சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த நபரை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் 45 வயது மதிக்கதக்க பெண். இவர், கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், 7ஆம் வகுப்பு படிக்கும் தனது 12 வயது மகளை காணவில்லை என தெரிவித்திருந்தார்.

விசாரணையில், சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த பம்மி (25) என்பவர், சிறுமியை காதலித்து திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. அவரது செல்போன் சிக்னலை கண்காணித்தபோது, திருப்பதியில் இருந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் தனிப்படை போலீசார் திருப்பதிக்கு விரைந்து, அங்கு ஒரு வீட்டில் இருந்து சிறுமியை பத்திரமாக மீட்டனர்.

பின்னர், சிறுமியை கடத்திச் சென்ற பம்மியை பிடித்து விசாரித்தனர். அதில், அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதும், அதை மறைத்து சிறுமியை காதலித்து, திருமணம் செய்வதாக கடத்திச் சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, பம்மியை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : மாஞ்சா நூலில் பட்டம் விட்ட மாணவர்கள்..!! குழந்தையின் கழுத்தை அழுத்ததால் பரபரப்பு..!! சென்னையில் அதிர்ச்சி..!!

English Summary

The man who kidnapped and raped the girl was arrested by the police in Poxo.

Chella

Next Post

பெல் நிறுவனத்தில் வேலை..!! மாதம் ரூ.40,000 வரை சம்பளம்..!! விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க..!!

Mon Nov 18 , 2024
Bell Corporation has published an employment notification to fill the vacant posts.

You May Like