fbpx

அதிரடி…! 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்கள் ஜுன் 30-ம் தேதி வரை பள்ளிக்கு வர வேண்டும்…!

இதுதொடர்பாக மாநில ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் 6 முதல் 18 வயதுடைய, பள்ளி செல்லாத மற்றும் இடைநின்றக் குழந்தைகள் (மாற்றுத் திறனாளி குழந்தைகள் உட்பட) மற்றும் இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆண்டு இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்கள், பள்ளிக்கல்வியைப் பாதியில் கைவிடும் மாணவர்களை இனம்கண்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளையும், சிறப்புப் பயிற்சிகளையும் வழங்கி, அவர்களை படிப்பைத் தொடர செய்வது அவசியம்.

இதை கருத்தில் கொண்டு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் ‘தொடர்ந்து கற்போம்’ என்ற முன்னோடித் திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2023-2024-ம் கல்வி ஆண்டில், அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம், பள்ளிஅளவில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு, அந்தந்த உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களைக் கொண்டு, ஜுன் 1 முதல் 30-ம் தேதி வரை 30 நாட்களுக்கு, திங்கள் முதல் சனி வரை காலை 9 முதல் மாலை 5 மணி வரை சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பெண்கள் இப்படி செய்தால் அது ஆபாசம் கிடையாது...! உயர் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு...!

Tue Jun 6 , 2023
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் ரஹனா பாத்திமா. இவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். அவர் தனது நிர்வாண உடலில் தன்னுடைய குழந்தைகளை வைத்து ஓவியம் வரைய வைத்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் மீது போக்சோ மற்றும் IT பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் […]
டெண்டர் முறைகேடு வழக்கு..! சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் அதிர்ந்துபோன எஸ்.பி.வேலுமணி..!

You May Like