இந்தியா முழுவதும் உள்ள நகரங்களுக்கான காற்றுத் தரக் குறியீட்டு (AQI) தரவை ஜனவரி 9ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. அதில், இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் மற்றும் சுத்தமான காற்றை கொண்ட நகரங்களில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை முதலிடம்
அந்த வகையில், சுத்தமான காற்று இருக்கும் நகரம் என தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. நெல்லையில் காற்றுத் தரக் குறியீடு 33ஆக உள்ளது. தூய்மையான காற்றை கொண்டதாக தஞ்சை மாவட்டம் 5-வது இடத்தை பெற்றுள்ளது. தஞ்சையில் காற்றுத் தரக் குறியீடு 47 ஆக உள்ளது.
அதேபோல், தூய்மையான காற்றின் தரத்தை கொண்ட பட்டியலில் நஹர்லகுன் (அருணாச்சலப்பிரதேசம்), மடிகேரி (கர்நாடகா), விஜயபுரா (கர்நாடகா), தஞ்சை (தமிழ்நாடு), கொப்பல் (கர்நாடகா), வாரணாசி (உத்தரப்பிரதேசம்), ஹூப்பள்ளி (கர்நாடகா), கண்ணூர் (கேரளா), Chhal (சத்தீஸ்கர்) ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
காற்று மாசு.. முதலிடம் பிடித்த டெல்லி
காற்று மாசு அதிகம் கொண்ட பட்டியலில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. அங்கு காற்றுத் தரக் குறியீடு 357ஆக உள்ளது. அடுத்ததாக, காசியாபாத் (உத்தரப்பிரதேசம்), பைர்னிஹாட் (மேகாலயா), சண்டிகர் (சண்டிகர்), ஹாபூர் (உத்தரப்பிரதேசம்), தன்பாத் (ஜார்கண்ட்), பாடி (ஹிமாச்சல பிரதேசம்) உள்ளிட்ட நகரங்கள் மோசமான காற்று மாசுபாட்டை கொண்டுள்ளதாக அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காற்றின் தர அளவீடு எப்படி பிரிக்கப்படுகிறது..?
0-50 வரை இருந்தால் பாதுகாப்பானது, 51-100 வரை இருந்தால் திருப்திகரமானது ( ஆனால் நோய் எதிர்ப்புதிறன் குறைவாக உள்ளவர்களுக்கு மூச்சு விடுவதில் சற்று சிரமம் இருக்கும்), 101 – 200 வரை இருந்தால் மிதமாக மாசுபட்டது (ஆஸ்துமா, இதயநோய், நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும்).
201 – 300 மோசமானது (நீண்டநேரம் வெளியில் இருப்பவர்களுக்கு சுவாச கோளாறுகள் ஏற்படும்), 301 – 400 மிகவும் மோசமானது (சுவாச நோய்கள் ஏற்படக்கூடும்), 401 – 450 கடுமையானது மற்றும் 450-க்கு மேல் “கடுமையாகத் தீவிரமானது” (ஆரோக்கியமானவர்களை பாதிப்பது மட்டுமன்றி ஏற்கனவே நோயுடன் இருப்பவர்களை தீவிரமாக பாதிக்கும்).
Read More : தை மாதத்தில் வரும் இந்த நாட்களை மறந்துறாதீங்க..!! அன்றைய தினம் இப்படி செய்தால் சகல நன்மைகளும் கிடைக்கும்..!!