பொதுவாக பெண்கள் வீட்டில் உள்ள அனைத்து பொருள்களும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைந்து எல்லாவற்றையும் சுத்தமாக வைத்திருப்பார்கள். குறிப்பாக சமையல் அறை சுத்தமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவது உண்டு. அந்த வகையில், சமையல் அறையில் உள்ள அனைத்தையும் சுத்தம் செய்பவர்கள் அநேக நேரம் அடுப்பு பர்னர்களை சுத்தம் செய்ய மறந்துவிடுவோம்.
அடுப்பை சுத்தம் செய்யும்போது கூட பர்னரை சுத்தம் செய்ய மறந்துவிடுவோம், அல்லது அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு விடுவோம். பர்னரை சுத்தம் செய்ய மிகச் சிலரே கவனம் செலுத்துகிறார்கள். அதனால் அடுப்பு புதுசு போல் இருந்தாலும், பர்னர் அழுக்காக இருக்கும்.. பர்னரை நாம் சுத்தமாக வைத்திருந்தால், தீ எந்த வித அடைப்பும் இல்லாமல் எரியும். இதனால் கேஸ் மிச்சமாகும். இதனால் உங்கள் பர்னர் அழுக்காக இருந்தால் இந்த டிப்ஸை பயன்படுத்தி புதுசு போல மாற்றி விடுங்கள்..
முதலில், எந்த பர்னரை சுத்தம் செய்வதற்கு முன்பும், அது சூடாக இல்லாததை உறுதி செய்ய வேண்டும். இதனால் சமைத்த உடன் பர்னரை சுத்தம் செய்வதை தவிர்த்து விடுங்கள்.. இப்போது பர்னரை சுத்தம் செய்ய, ஒரு பாத்திரத்தில் பாதி தண்ணீர் மற்றும் வினிகரை கலந்து அதில் பர்னரை மூழ்கும்படி சுமார் 30 நிமிடங்கள் தண்ணீரில் வைக்கவும். பின்னர் அதை எடுத்து சாதாரண நீரில் கழுவவும். இப்போது தண்ணீர் மற்றும் பேக்கிங் சோடாவை கலந்து, அதனை பர்னரில் தேய்த்து 15-30 நிமிடங்கள் ஊற விடவும். பின்னர், டூத் பிரஷ் பயன்படுத்தி நன்கு தேய்த்து கொள்ளுங்கள். இப்போது அதை கழுவி, துணியால் துடைத்து உலர வைக்கவும். இப்போது உங்கள் பர்னர் புதுசு போல் ஆகிவிடும்.