fbpx

சூடானில் உச்சக்கட்டம்..!! துப்பாக்கி குண்டு பாய்ந்து இந்தியர் உயிரிழப்பு..!! வெளியான பகிரங்க எச்சரிக்கை..!!

சூடானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ராணுவத்திற்கும், துணை ராணுவப் படையினருக்கும் இடையில் நடைபெற்று வரும் மோதலில் இந்தியர் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

கடந்த 2019ஆம் ஆண்டு சூடான் அதிபர் ஒமர் அல்-பஷீர் நடத்தி வந்த சர்வாதிகார ஆட்சி மக்கள் போராட்டத்தால் அகற்றப்பட்டது. அதன்பின் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ராணுவ ஆட்சிக்கு எதிராக அதிருப்தி தெரிவித்து வந்த துணை ராணுவப் படையினர் அந்நாட்டின் தலைநகர் கர்த்தூமில் உள்ள விமான நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும், அதிபர் மாளிகையையும் துணை ராணுவப் படையினர் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

இதனால்,ராணுவத்துக்கும் துணை ராணுவப் படையினருக்கும் பயங்கர மோதல் வெடித்துள்ளது. அதிபர் மாளிகை, ராணுவ தலைமையகம் உள்ளிட்ட இடங்களில் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. மேலும், நாடு முழுவதும் கலவரம் பரவியுள்ளது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில், இந்தியாவை சேர்ந்த ஆல்பர்ட் அகஸ்டின் என்பவரும் கொல்லப்பட்டதாக சூடானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சூடானில் உள்ள இந்திய துணை தூதரகம் அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, சூடானில் துப்பாக்கிச் சூடும், கலவரமும் நடந்து வருதால் அங்கிருக்கும் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் யாரும், வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும், அடுத்த தகவலுக்கு காத்திருங்கள் என்றும் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

ஷாக்கிங் நியூஸ்..!! கார் வாங்கப்போறீங்களா..? விலை அதிரடியாக உயர்கிறது..!! என்ன காரணம்..?

Sun Apr 16 , 2023
சர்வதேச நாடுகளுடன ஒப்பிடுகையில் இந்தியாவின் வாகன சந்தை சீரான முன்னேற்றத்தில் உள்ளது. ஒரு காலத்தில் இந்தியா வெளிநாடுகளில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்து வந்த நிலை மாறி, இப்போது உலகின் பல நாடுகளுக்கு இந்தியா வாகன ஏற்றுமதி செய்து வருகிறது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள சூழல் இந்தியாவின் வாகன உற்பத்தியில் கணிசமான தாக்கத்தையோ அல்லது சுணக்கத்தையோ ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் முக்கியமான 2 காரணிகள் மூலதனப் பொருட்களின் விலை […]

You May Like