fbpx

உச்சக்கட்டம்..!! விதவை பெண்ணின் தலையை வெட்டி தோலை அகற்றிய கொடூரம்..!! அதிரவைக்கும் சம்பவம்..!!

40 வயது விதவை பெண்ணின் தலையை வெட்டி தோலை உறித்தெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் சின்ஜோரோ நகரில் நேற்று முன்தினம் இந்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 40 வயது பெண் தலை துண்டிக்கப்பட்டு, மார்பகம் துண்டிக்கப்பட்டதாக பாகிஸ்தானின் இந்து சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் செனட்டரான கிருஷ்ண குமாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”40 வயது விதவை கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் மிகவும் மோசமான நிலையில், சிதைக்கப்பட்டுள்ளது. அவரது தலை உடலில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு உள்ளது. தலை முழுவதும் உள்ள சதையை காட்டுமிராண்டிகள் அகற்றியுள்ளனர்”. என்று தெரிவித்துள்ளார்.

உச்சக்கட்டம்..!! விதவை பெண்ணின் தலையை வெட்டி தோலை அகற்றிய கொடூரம்..!! அதிரவைக்கும் சம்பவம்..!!

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஜியாலா அமர் லால் பீல், சிதைக்கப்பட்ட உடல் வயலில் கண்டெடுக்கப்பட்டதாகவும், அந்தப் பெண்ணின் குடும்பத்தினரிடமிருந்து போலீசார் விவரங்களை சேகரித்து வருவதாகவும் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவரின் உடல் மற்றும் முகத்தில் இருந்து தோல் உரிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மேலும் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாக கூறினார்.

Chella

Next Post

#டெல்லி :லிப்டில் நடந்த கொடூரம்.. கண் கலங்க வைக்கும் வீடியோ..!

Fri Dec 30 , 2022
டெல்லியில் வீட்டு வேலைக்குச் சென்ற சிறுமியை வீட்டு உரிமையாளர் தலைமுடியைப் பிடித்து கழுத்தை இறுக்கி வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. டெல்லி நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் வேலை செய்து வருகிறார். வீட்டின் உரிமையாளரான ஷெபாலி கவுல் அவரை கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்து வந்துள்ளார். சிறுமியை அடிக்கடி அடித்து உதைத்து வந்ததாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து தப்பித்து வீட்டுக்குச் செல்ல முயற்சிக்கும் போதெல்லாம், வீட்டின் உரிமையாளர் சிறுமியை […]

You May Like