கோவையில் செயல்பட்டு வரும் clonifypro ஐடி நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி : ClonifyPro ஐடி நிறுவனத்தில் இருந்து தற்போது QA Engineer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி உள்பட அது சார்ந்த பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
சாப்ட்வேர் டெஸ்ட்டிங் லைஃப்சர்க்கிள் (STLC)மற்றும் லைஃப் சைக்கிள் பற்றிய புரிதல் இருக்க வேண்டும். அதேபோல் டெஸ்ட் மேனேஜ்மென்ட் மற்றும் பக் டிராக்கிங் டூல்ஸ்களான JIRA, TestRail அல்லது Bugzilla ஆகியவை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆட்டோமேஷன் டெஸ்ட்டிங் டூல்ஸ்களான Selenium, Appium அல்லது Cypress தெரிந்திருந்தால் பிளஸ் பாயிண்ட்டாகும்.
மேலும் அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் மற்றும் பிரச்சனையை தீர்க்கும் திறன், நல்ல கம்யூனிகேஷன் திறமை ஆகியவை இருக்க வேண்டும். Preferred Skils ஆக Postman அல்லது RestAssures ஆகியவற்றை பயன்படுத்தி ஏபிஐ டெஸ்ட்டிங்கில் அனுபவம் இருக்க வேண்டும். CI/CD பைப்லைன்ஸ் மற்றும் Git பற்றிய அறிவு கொண்டிருக்க வேண்டும். பெர்பாமன்ஸஅ டெஸ்ட்டிங் டூல்ஸ் JMeter அல்லது LoadRunner தெரிந்திருக்க வேண்டும். Agile methodologies மற்றும் Scrum Processes தெரிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் கோவை சிவனத்தபுரத்தில் உள்ள நிறுவனத்தில் பணி நியமனம் செய்யப்படுவார்கள். மாதச்சம்பளம் குறித்த அறிவிப்பு கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அதேபோல் விண்ணப்பத்துக்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மேலும் இதுதொடர்பான விரிவான தகவலுக்கு https://cloneifypro.com/jobs/qa-engineer/ என்ற இணையதளத்தை பார்வையிடவும்.
Read more:நில அபகரிப்பு வழக்கில் சிக்கிய மு.க.அழகிரி.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!