fbpx

திருப்பதியில் ஆடை கட்டுப்பாடு..!! நெற்றியில் திலகம், குங்குமம்..!! தேவஸ்தானம் முக்கிய உத்தரவு..!!

திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தினமும் நெற்றியில் திலகம், குங்குமம், விபூதி வைக்க வேண்டும் என்றும் சனிக்கிழமைகளில் ஆடை கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் எனவும் தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பதி தேவஸ்தான இணைசெயல் அதிகாரி வீரபிரம்மம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் சனிக்கிழமைகளில் வெள்ளை வேட்டி மற்றும் வெள்ளை சட்டை அணிந்து பணிக்கு வரவேண்டும். தினமும் அனைத்து ஆண் ஊழியர்களும் தங்கள் நெற்றியில் திலகம், குங்குமம், விபூதி வைத்திருக்க வேண்டும்.

அதேபோல் பெண் ஊழியர்கள் இந்துக்களின் புடவை, ரவிக்கை, சுடிதார் மேல் துப்பட்டாவுடன் அணிந்து, நெற்றியில் திலகம், குங்குமம் வைக்க வேண்டும். அனைத்து ஊழியர்களும் ஆடை கட்டுப்பாட்டை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தேவஸ்தானத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் ஒருவரையொருவர் மற்றும் பிறரை சந்திக்கும் போதெல்லாம் ‘கோவிந்தா’ அல்லது ‘ஓம் நமோ வெங்கடேசாயா’ என்று கூறி பின்னர் பேச தொடங்க வேண்டும். இந்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : இனி ‘QR’ கோடு மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்..!! எப்படி தெரியுமா..? விரைவில் தமிழ்நாடு முழுவதும் அறிமுகம்..!!

English Summary

Devasthanam has ordered that all employees working in Tirupati Devasthanam should be held daily on the forehead, saffron, vibhuti and to adopt clothing restrictions on Saturdays.

Chella

Next Post

இந்துகளின் ராஜியமாக மாறிவரும் பாகிஸ்தான்!. முஸ்லிம் எண்ணிக்கை 96.35 சதவீதமாக சரிவு!. கணக்கெடுப்பில் தகவல்!

Sat Jul 20 , 2024
Dominant kingdom of Hindus in Pakistan! The number of Muslims declined to 96.35 percent! Information on the survey!

You May Like