இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் கீழகாசக்குடிமேடு கிராமத்தைச் சேர்ந்த உலகநாதன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நேற்று முன்தினம் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 12 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். விசைப்படகில் கீழகாசாகுடிமேடு கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன், கார்த்தி , செல்வமணி உள்ளிட்ட 12 மீனவர்கள் வழக்கம் போல் கோடியக்கரைக்கு தென் கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்குவந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி படகில் இருந்த 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களின் படகுகளையு் பறிமுதல் செய்தனர்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, ’’கடந்த 9 மாதங்களில்இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 150 மீனவர்கள் விடுதலை செய்யபபட்டுள்ளார். விடுதலைக்காக உதவியதற்கு மிக்க நன்றி . ’மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 5 பேர் உள்பட 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்னர். அவர்களை விடுவிக்க தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.