fbpx

CM Stalin | நம்மளா? அவங்களா? பார்க்கலாம்..!! வைரலாகும் ’ஸ்டாலின் குரல்’ வீடியோ..!!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ‘ஸ்டாலின் குரல்’ என்ற பெயரில் திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ வைரலாக பரவி வருகிறது.

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணிகளை இறுதி செய்து, வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரம் காட்டி வருகின்றன. குறிப்பாக பிரதான கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகியவை கூட்டணிகளை உறுதி செய்து, வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கி உள்ளது.

இன்று மாலை திருச்சியில் இருந்து பிரச்சாரத்தை துவங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்கிடையே, திமுக சார்பில் கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது, ’ஸ்டாலின் தான் வராரு, விடியல் தரப் போறாரு’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட வீடியோ அரசியலில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் திமுகவை ஆதரிக்கும் வகையில் ’இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன் – ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் புதிய வீடியோ ஒன்றை திமுக ஐடி விங் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Read More : மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் பொன்முடி..!! பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர்..!!

Chella

Next Post

அதிமுக கூட்டணி உடைகிறது..? போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால் அதிருப்தி..!! 2 நாட்களில் முடிவு அறிவிப்பு..!!

Fri Mar 22 , 2024
அதிமுக கூட்டணியில் தொடர்வது குறித்து இன்னும் இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார். வரும் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும், தேமுதிகவுக்கு மத்திய சென்னை, விருதுநகர், திருவள்ளூர் (தனி), தஞ்சை, கடலூர் ஆகிய தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணிக்கு புரட்சி பாரதம் ஆதரவு தருவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், திருவள்ளூர் […]

You May Like