fbpx

DMK: முதல்வர் மு.க ஸ்டாலின் உறவினர் திடீர் மரணம்.!! உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி.!!

தமிழகத்தில் வாக்குப்பதிவு நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு( DMK) தொடர்ந்து பேரிழப்பு ஏற்பட்டு வருகிறது. திமுகவின் விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ புகழேந்தி உடல் நலக்குறைவால் இன்று மரணம் அடைந்த நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் மைத்துணரும் உடல் நலக்குறைவாழ் இன்று மரணம் அடைந்துள்ளார்.

மு க ஸ்டாலின் மைத்துனரான லெனின் திராவிட முன்னேற்றக் கழகத்தில் (DMK) அங்கம் வகித்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று மரணமடைந்துள்ளார். இந்தச் செய்தி திமுகவினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திருமங்கலத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு விளையாட்டுத்துறை அமைச்சரும் முதல்வரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் குடும்பத்தினரோடு சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலும் கூறி சென்றுள்ளார். முதல்வரும் லெனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Post

Earthquake: ஆப்கானிஸ்தானில் அதிகாலை ஏற்பட்ட 2 பயங்கர நிலநடுக்கம்...! அலறியடித்த மக்கள்...!

Sun Apr 7 , 2024
இன்று அதிகாலை 02.26 மணியளவில் ஆப்கானிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இன்று ஆப்கானிஸ்தானில் ரிக்டர் அளவுகோலில் 4.3 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி அதிகாலை 2.26 மணியளவில் 120 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்த சில நிமிடங்களுக்குப் பிறகு, அதிகாலை 2.47 மணியளவில், ஜம்மு காஷ்மீரில் உள்ள கிஷ்த்வார் […]

You May Like