fbpx

மின்துறைக்கு வழங்கப்படும் நிலக்கரி…! கண்காணித்து வரும் மத்திய அரசு…!

மத்திய நிலக்கரி அமைச்சகம், மின்சாரம் மற்றும் ரயில்வேத்துறை அமைச்சகங்களுடன் ஒருங்கிணைந்து மின்துறைக்கு வழங்கப்படும் நிலக்கரி தொடர்பான நடவடிக்கைகளை தொடர்ந்து சட்டப்படி கண்காணித்து வருவதாக தெளிவுபடுத்தியுள்ளது. இந்த ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாக, உள்நாட்டு நிலக்கரி பயன்பாட்டின் கீழ் உள்ள அனல்மின் நிலையங்களில் நிலக்கரியின் இறுதி இருப்பு, இந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி நிலவரப்படி, 25.6 மில்லியன் டன் ஆக இருந்தது.

இது கொவிட் பெருந்தொற்று 2020-21 ஆண்டைத் தவிர அக்டோபர் மாதத்தில் அதிகபட்ச இருப்பு என்பது குறிப்பிடத்தக்கது. மின்துறைக்கான உள்நாட்டு நிலக்கரி விநியோகம் கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 12 சதவீதம் அதிகமாக உள்ளது. இது எந்த நிதியாண்டிலும் முதல் ஏழு மாதங்களில் மின்சாரத் துறைக்கு இதுவரை இல்லாத அதிகபட்ச விநியோகமாகும்.

Vignesh

Next Post

ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெறக் கோரி குடியரசுத் தலைவரிடம் மனு...!

Wed Nov 9 , 2022
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெறக் கோரி குடியரசுத் தலைவர் முர்முவிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான மதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சைக்குறிய வகையில் பேசி வருவதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். மேலும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நீண்ட காலமாக நிலுவையில் வைத்துள்ளார் […]
’தமிழ் மக்கள் போல் தமிழில் பேச வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்’..! ஒருநாள் தமிழில் பேசுவேன்..! ஆளுநர்

You May Like