fbpx

கொத்தாக சிக்கிய கோவை தொழிலதிபர்..? ஐடி சோதனை குறித்து பரபரப்பு விளக்கம்..!! இத்தனை கோடிகளா..?

தொழிலதிபர் லாட்டரி மார்டின் இல்லம் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்திய நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் துடியலூர் வெள்ளக்கிணர் பிரிவு பகுதியில் பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்டின் வீடு உள்ளது. அதன் அருகிலேயே மார்டின் குரூப் ஆப் கம்பெனிஸ் என்ற கார்ப்பரேட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது தவிர கவுண்டர்மில் பகுதியில் மார்டின் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியும், காந்திபுரம் பகுதியில் மார்டின் குழுமத்திற்குச் சொந்தமான அலுவலகம் உள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் வருமான வரித்துறை அதிகாரிகள் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர்.

அதில் அவர்கள், “எங்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது கொல்கத்தா வருமான வரித்துறை அதிகாரிகள் தானே தவிர, அமலாக்கத் துறை அதிகாரிகள் இல்லை. ஐடி அதிகாரிகள் நடத்திய இந்த சோதனைக்கு எங்கள் அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். பண மோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அமலாக்கத் துறை சோதனை நடத்தியாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது” என்று தெரிவித்தனர்.

மேலும், அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே லாட்டரி விற்பனை நடைபெறுகிறது. சட்டத்திற்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் லாட்டரி விற்பனையை நடத்துகிறோம். 2002-2003 ஆண்டில் நாட்டிலேயே அதிகபட்ச தனிநபர் வருமான வரியைச் செலுத்தியது எங்கள் குழுமத் தலைவர் மார்டின்தான். சுமார் ரூ.100 கோடி அவர் வருமான வரியாகச் செலுத்தியுள்ளார். மேலும், 2017 முதல் செப்டம்பர் 2023 வரை ஜிஎஸ்டியாக மார்டின் குழுமம் 23,119 கோடி ரூபாய் செலுத்தியுள்ளது.

1985-1986 முதல் 202-203 நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் ரூ.4,577 கோடி வருமான வரி செலுத்தியுள்ளோம். முந்தைய நிதியாண்டில் மட்டும் வருமான வரியாக 600 கோடி ரூபாய் செலுத்தியுள்ளோம். அப்படி இருக்கும் போது சோதனை தொடர்பாகப் பொய்யான தகவல்கள் பரவியதால் அது குறித்து விளக்கம் அளிக்க கடமைப்பட்டுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…! தமிழக அரசு அதிரடி…

Tue Oct 17 , 2023
தமிழக அரசு அவ்வப்போது ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட உயர் பொறுப்பில் இருக்கும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டு வருகிறது. அதன்படி நேற்றைய தினம் பல்வேறு அரசு துறைகளின் உள்ள 7 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிக்கை வெளியிட்டார். அதன்படி, வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் […]

You May Like