fbpx

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் இருவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்..!

2022 ஆம் ஆண்டு ஐஎஸ்ஐஎஸ் தூண்டுதலால் செய்யப்பட்ட கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் இருவர் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நேற்றைய தினம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

என்ஐஏ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின்படி, குற்றம் சாட்டப்பட்ட முகமது அசாருதீன் என்ற அசார் மற்றும் முகமது இத்ரிஸ் ஆகியோர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (யுஏபிஏ), இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் வெடிபொருட்கள் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 13 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தாக்கல் செய்த வழக்குப் புகார்களில் பெயரிடப்பட்டுள்ளனர்.

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் காரில் கொண்டு செல்லப்பட்ட சிலிண்டர் திடீரென வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த ஜமேஷா முபின் (28) என்பவர் உயிரிழந்தார். இது தீவிரவாத தாக்குதல் என்று குற்றம் சாட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த வழக்கு தேசிய பாதுகாப்பு முகமையின்(என்ஐஏ) விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் காவலில் எடுக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Kathir

Next Post

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானப்படை இணைந்து ‘டெசர்ட் நைட்’ விமானப்படை போர் பயிற்சி...!

Thu Jan 25 , 2024
இந்திய விமானப்படை, பிரெஞ்சு விமானப்படை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானப்படை இணைந்து ‘டெசர்ட் நைட்’ விமானப்படைப் போர்ப்பயிற்சியை மேற்கொண்டன. இந்திய விமானப்படை சார்பில் சுகோய்-30 எம்கேஐ, மிக் -29, ஜாகுவார், அவாக்ஸ், சி-130-ஜே உள்ளிட்ட விமானங்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றன. பிரான்ஸ் சார்பில் ரஃபேல் போர் விமானம், மல்டி ரோல் டேங்கர் ஆகியவை பங்கேற்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானப்படை சார்பில், எஃப்-16 ரக விமானம் இதில் பங்கேற்றது. […]

You May Like