fbpx

இரண்டாக பிரியும் கோவை?… தமிழ்நாட்டில் உதயமாகும் 7 புதிய மாவட்டங்கள்?… எந்தெந்த பகுதிகள்?… எந்த மாவட்டம்?

தமிழ்நாட்டில் 7 புதிய மாவட்டங்கள் உதயமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது தமிழகத்தில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன. கடைசியாக 2020ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பிரித்து, புதியதாக மயிலாடுதுறை மாவட்டம் 38வது மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பு 2019ஆம் ஆண்டில் 5 மாவட்டங்கள் புதிதாக உருவெடுத்தன. முன்னதாக, நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரித்து தென்காசி மாவட்டம் (33), விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் (34), வேலூர் மாவட்டத்தைப் பிரித்து திருப்பத்தூர் மாவட்டம் (35) மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் (36), காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டு மாவட்டம் (37) என 5 புதிய மாவட்டங்கள் உருவாகின.

இந்த ஐந்து மாவட்டங்கள் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரிக்கப்பட்டன. ஐந்து புதிய மாவட்டங்களுக்கும் அதே ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். பிறகும் பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தனி மாவட்டம் கோரி அரசிடம் மனுக்கள் அளித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் புதிதாக 7 மாவட்டங்கள் உதயமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கும்பகோணம், பொள்ளாச்சி, கோவில்பட்டி, பழனி, ஆரணி, விருத்தாச்சலம், கோபிச்செட்டிபாளையம் ஆகியவை புதிய மாவட்டங்களாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Kokila

Next Post

பள்ளி மைதானத்தில் மாணவனுடன் செக்ஸ் வைத்துக்கொண்ட ஆசிரியை!… கேட்டில் காவலுக்கு நின்ற சக மாணவர்கள்!… அமெரிக்காவில் அதிர்ச்சி!

Fri Jan 12 , 2024
அமெரிக்காவின் மிசௌரியில் பள்ளி மைதானத்தில் மாணவருடன் உடலுறவு கொண்டதாக அளிக்கப்பட்ட புகாரில் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மிசௌரி புலாஸ்கி கவுண்ட் பகுதியில் அமைந்துள்ளதுள Laquey உயர்நிலைப் பள்ளி. இங்கு கணித ஆசிரியரான Hailey Clifton-Carmac. இவர் பள்ளி மைதானத்திலேயே மாணவரிடன் உடலுறவு வைத்துக்கொண்டதாக சக மாணவர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், மாணவனின் நலனுக்கு ஆபத்தை விளைவித்தல், கற்பழிப்பு, மாணவருடன் பாலியல் தொடர்பு ஆகிய […]

You May Like