கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிக்காரம்பாளையம் ஊராட்சியில் 2 அரசுப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி மாணவர்கள் விமானத்தில் பறக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையை சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் நிறைவேற்றி வைத்துள்ளார்.
அதேபோல், சென்னையில் உள்ள அண்ணா நூலகத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், ஊராட்சி தலைவர் ஞானசேகரன், தனது சொந்த செலவில் கோவையில் இருந்து சென்னைக்கு 55 மாணவ, மாணவிகளை விமானத்தில் அழைத்துச் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் பயணம் செய்த மாணவர்கள் அதனை வீடியோ எடுத்து மகிழ்ந்தனர். அரசுப்பள்ளி மாணவர்கள் இதுவரை கீழே இருந்து வானில் பறக்கும் விமானத்தை பார்த்த காலம் மாறி, நாங்களும் விமானத்தில் பறக்கிறோம் என இந்த வீடியோவை பதிவு செய்து மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். மேலும், சென்னை வந்த பள்ளி மாணவர்கள், மெட்ரோ ரயிலில் சென்று அண்ணா நூலகத்தை பார்வையிட்டனர்.
Read More : ஆசியாவின் ‘கோடீஸ்வர தலைநகரமாக’ உருவெடுத்த மும்பை..!! இந்தியாவில் இத்தனை பணக்காரர்களா..?