fbpx

அக்டோபர் 3-ம் தேதி வரை…! 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…! முழு விவரம்

தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10, 12 ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்துச் செல்லும் திறன் பெற்ற பயிற்சியாளர்கள் மேற்படிப்பைத் தொடர 10, 12 ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழ் பெறுவதற்கான வழிகாட்டுதல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது அகில இந்திய தொழில் தோவு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் நடத்தப்பட்ட மொழித் தோவில் தனித்தோவா்களாக கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றவா்களிடம் இருந்து 10, 12 ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற தகுதிவாய்ந்த நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து உரிய கல்வி சான்றிதழ்களை இணைத்து மாவட்டத்தில் உள்ள நோடல் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தில் இருந்து 10, 12 ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற்று வழங்கப்படும். விண்ணப்பத்தை உரிய கல்விச் சான்றிதழ்களுடன் கோவை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அக்டோபர் 3-ம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0422-2642041, 88385-83094 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இந்த பண்டிகைக்கு சம்பவம் இருக்கு..!! மத்திய அரசு ஊழியர்களுக்கு பண மழை கொட்டப்போகுது..!!

Tue Sep 26 , 2023
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, வீட்டு வாடகை கொடுப்பனவு, அக நிவாரணப்படி உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டின் 2ஆம் கட்ட அகவிலைப்படி (DA) உயர்வு குறித்த அறிவிப்புக்காக ஊழியர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு பாசிட்டிவான தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நவராத்திரி, தீபாவளி என […]

You May Like