12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுச் செல்லும் மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான “கல்லூரி கனவு” நிகழ்ச்சி சேலம் மாவட்டத்தில் இன்று சேலம் ஓமலூர், பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் இரவிச்சந்திரன் தனது செய்தி குறிப்பில்; 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்த “கல்லூரி கனவு” என்ற நிகழ்ச்சியினை சேலம் மாவட்டத்தில் இன்று சேலம் மாவட்டம், ஓமலூர், பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளைச் சார்ந்த உயர் அலுவலர்கள் மற்றும் துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளார்கள். இதில் கலந்துகொண்டு பயன்பெற விரும்பும் மாணவ, மாணவிகள் வருகின்ற 08.05.2024 புதன்கிழமை காலை 9 மணிக்கு நேரடியாக நிகழ்ச்சி நடைபெறும் ஓமலூர், பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வருகைபுரிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.