fbpx

திடீரென தேர்வு அறையிலிருந்து எழுந்து வந்து 3-வது மாடியிலிருந்து குதித்த கல்லூரி மாணவி..!! சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னையில் தேர்வெழுதிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி, திடீரென பாதியில் எழுந்து சென்று 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புளியந்தோப்பு வ.உ.சி நகர் 2-வது தெருவைச் சேர்ந்த இரண்டாவது தெருவை சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி தாஜூதீனின் மகள் ஹாசீயா (19). இவர், சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது கல்லூரியில் தேர்வு நடைபெற்று வருவதால், மாணவி ஹாசீயா கல்லூரிக்கு தேர்வெழுத சென்றுள்ளார்.

தேர்வு அறையில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த நிலையில், மாணவி ஹாசீயா திடீரென அறையில் இருந்து எழுந்து வந்து 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கல்லூரி நிர்வாகம் மற்றும் சக மாணவர்கள் உடனே தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவி இடுப்பு மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு கவலைக்கிடமான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து மாணவியிடம் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், மாணவி ஹாசீயாவின், சகோதரி ஃபாத்திமா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். அன்று முதல் துக்கம் தாளாமல் மன அழுத்தம் ஏற்பட்டு தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹாசீயா சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

மன அழுத்திற்கு ஆளாகி தொடர் சிகிச்சையில் இருந்து மாணவி ஹாசீயா இன்று கல்லூரிக்கு தேர்வெழுத வந்த நிலையில், திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் கல்லூரி மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Read More : இந்தி டியூஷன் டீச்சருடன் மலர்ந்த காதல்..!! சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் உல்லாசம்..!! வயதை காரணம் காட்டி கழட்டிவிட்ட மெக்கானிக்..!!

English Summary

A shocking incident has occurred in Chennai when a college student, who was taking an exam, suddenly got up halfway through and attempted suicide by jumping from the third floor.

Chella

Next Post

SpaDex செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விடுவித்து இஸ்ரோ சாதனை.. சந்திரயான் 4-க்கு அடித்தளம்..

Thu Mar 13 , 2025
The Indian Space Research Organisation (ISRO) today successfully launched two satellites as part of its SpaDex experiment.

You May Like