மும்பையில் சினிமா வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதாக கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டி வந்த புகைப்பட கலைஞர் கைது செய்யப்பட்டார்.
மும்பையை சேர்ந்த 30 வயது மாடல் அழகி ஒருவர் இந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி அழைந்துள்ளார். அப்போது, ஹிமால் மேத்தா என்ற புகைப்பட கலைஞர், மாடல் அழகியிடம் வெப் சீரியல்களிலும், திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறியிருக்கிறார். பின்னர், அந்தேரியில் உள்ள ஓட்டலுக்கு கடந்த ஜனவரி மாதம் அந்த இளம்பெண்ணை வரவழைத்தார்.
அங்கு அந்த மாடல் அழகியிடம் ஆசைவார்த்தை கூறி ஆபாசமாக புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த 8 மாதங்களாக இந்த ஆபாச புகைப்படங்களைக் காட்டி, அவரை மிரட்டி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார் அந்த புகைப்பட கலைஞர்.
இதனால் விரக்தி அடைந்த மாடல் அழகி, இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இளம்பெண்ணை பலாத்காரம் செய்த புகைப்பட கலைஞர் ஹிமால் மேத்தாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.