சென்னை அயனாவரம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் வசந்தா (52). இவர், கணவனைப் பிரிந்து தனது மகள் நிஷாவுடன் வசித்து வந்த நிலையில், நிஷா அம்பத்தூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவர்கள் வசிக்கும் வீட்டின் கீழ் தளத்தில் சத்தியமூர்த்தி (42) என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சத்தியமூர்த்தி, பாஜகவில் மத்திய சென்னை மேற்கு மாவட்டம், வில்லிவாக்கம் தொகுதி பகுதிச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் நிஷாவுக்கும், சத்திய மூர்த்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் நெருங்கி பழகி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் இந்த விவகாரம் சத்தியமூர்த்தியின் மனைவி காமாட்சிக்கு தெரியவந்தது. இதுகுறித்து அவர் நிஷாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வசந்தா, தனது மகள் நிஷாவை கண்டித்துள்ளார். இதனால் தனது தாயை தகாத வார்த்தையால் திட்டியதுடன், சத்தியமூர்த்திக்கும் நிஷா தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, நிஷா வீட்டிற்கு வந்த கள்ளக்காதலன் சத்தியமூர்த்தி, அவரது தாய் வசந்தாவுடன் சண்டையிட்டு, அவரது கையை முறுக்கி அடித்து உதைத்துள்ளார். இதில் காயமடைந்த வசந்தா, கேம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து அயனாவரம் காவல் நிலையத்தில் வசந்தா புகார் அளித்துள்ளார். இதையடுத்து, பாஜக பிரமுகர் சத்தியமூர்த்தி மீது வழக்குப் பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.