பிரபல நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ் தனக்கு ஒரு கை, கால் செயலிழந்து விட்டதாகவும், உதவி செய்யுமாறும் கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், நடிகர்கள் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றன.
பிரபல நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ். வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் இவர் நடித்துள்ளார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த இவர், ஆரம்பத்தில் ஸ்டன்ட் நடிகராக பணியாற்றினார். பின்னர், நகைச்சுவை பக்கம் திரும்பினார். இவர், கடந்த 2022ஆம் ஆண்டு சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டார். இதற்காக விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
தனது ஒரு கை, கால் செயலிழந்து விட்டதாகவும் உதவி செய்யுமாறும் வீடியோ ஒன்றில் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வீடியோவில், “எனக்கு கை, கால்விழுந்துவிட்டது. நடக்க முடியவில்லை. பேசவும் முடியவில்லை. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்ல பணம் இல்லை. நடிகர்கள், சங்கங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்நிலையில், அவரது மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் சிம்பு ரூ.2 லட்சம் பணம் கொடுத்து உதவியுள்ளார். அதேபோல விஜய் டிவி பிரபலம் KPY பாலா ரூ.1 லட்சமும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 25,000 ரூபாயும் வழங்கியுள்ளனர். இவர்களுக்கு நடிகர் வெங்கல் ராவ் நன்றி தெரிவித்துள்ளார்.
Read More : அதிமுகவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி முழு ஆதரவு..!! சீமான் அறிவிப்பு..!!