நகைச்சுவை மூலமாக மக்களை சிரிக்க வைத்த நடிகர் போண்டாமணி , தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்து பரிதாப நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..
சென்னையில் நகைச்சுவை நடிகர் போண்டா மணி ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து படத்தில் நடித்துக் கொண்டிருந்த அவர் சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தற்போது உதவிக்கு யாருமே இல்லை என அவர் கதறி அழுகின்றார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் , ஆறுமாதமாகவே உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. இருந்தாலும் படத்திற்காக நான் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருந்தேன். சமீபத்தில் பருவக் காதல் என்ற படத்தில் நடித்தேன். அந்தப் படத்தில் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்று நிஜசாக்கடையில் விழ வைத்தார்கள்.
இதனால் நான் பாதிக்கப்பட்டேன் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டது படப்பிடிப்பு தளத்திலேயே மயக்கமானேன். தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகின்றேன். தொடர்ந்து மூச்சுவிட சிரமப்பட்டேன். சமீபத்தில்தான் எனது இரு கிட்னியும் செயலிழந்ததாக கூறினார்கள். என் வாழ்க்கையில் இப்படி ஒரு துயரம் நடக்கும்னு நினைச்சுபார்க்க கூட முடியல.’’ என கண்ணீர் மல்க கூறினார்.