அடுத்தாண்டு ஜூன் 2ஆம் தேதி வால்நட்சத்திரம் ஒன்று பூமிக்கு அருகில் கடந்து செல்ல உள்ளதாகவும், இதனால் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் இதை வெறும் கண்களால், பைனாகுலரில் பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த வால்நட்சத்திரம் முதலில் 1812ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி பிரான்ஸ் விஞ்ஞானி ஜீன் லுாயிஸ் பான்ஸ்சால் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் 1883ஆம் ஆண்டு அமெரிக்காவின் வில்லியம் ராபர்ட் ப்ரூக்ஸ்சால் மீண்டும் கண்டறியப்பட்டது. இதற்கு ’12பி/பான்ஸ் – ப்ரூக்’ என இவர்களது பெயர் சூட்டப்பட்டது. இது 71.32 ஆண்டுக்கு ஒருமுறை பூமிக்கு அருகில் வந்து கடந்து செல்கிறது. மணிக்கு 1600 கி.மீ., வேகத்தில் சுற்றிவரும். இதிலிருந்து 2023 அக். 31இல் வெடிப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து வரும் நாட்களிலும் இதிலிருந்து ஒளி பிரகாசிக்கும். அதன்படி, அடுத்தாண்டு ஏப். 8ஆம் தேதி சூரிய கிரகணம் ஏற்படும். அப்போது 25 டிகிரி கோணத்தில் இருக்கும் இந்த வால் வால் நட்சத்திரம் ஏப். 21ல் சூரியனை அருகில் கடந்து செல்லும். அடுத்து 42 நாட்களுக்கு பின் பூமிக்கு அருகில் கடந்து செல்லும். அப்போது பூமியில் இருந்து 23.2 கோடி கி.மீ., துாரத்தில் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.