fbpx

நாளை மறுநாள் செமஸ்டர் தேர்வுகள் தொடக்கம்!… சென்னைப் பல்கலைக் கழகம் அறிவிப்பு!

மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த செமஸ்டர் தேர்வுகள் வரும் 11ம் தேதி தொடங்க உள்ளதாக சென்னைப் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு உதவிப் பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளின் நவம்பர்/டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள் நடந்து வந்தன. கடந்த 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த செமஸ்டர் தேர்வுகள் மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான மாற்று தேதியை சென்னைப் பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த செமஸ்டர் தேர்வுகள் வரும் 11ம் தேதி முதல் 12ம் தேதிவரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு www.unom.ac.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

ஒரே வாரத்தில் 35,000 பேர்..!! சிங்கப்பூரை மீண்டும் மிரட்டும் கொரோனா..!! முழு ஊரடங்கு..?

Sat Dec 9 , 2023
சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இதனால் உலக நாடுகள் பலவும் பெரும் பொருளாதார பாதிப்பை சந்தித்தன. முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் உருவானது. பணியாளர்களும் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்கப்பட்டனர். பின்னர், மத்திய-மாநில அரசுகளின் நடவடிக்கைகளால் கொரோனா குறைந்து, படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டது. தற்போது பல நாடுகளில் இயல்பு நிலை […]

You May Like