சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.36 குறைந்துள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்ர்களின் விலை குறைக்க்பபடும். எண்ணை நிறுவனங்கள் கூட்டமைப்பு டெ்ரோல் , டீசல் விலையை தினமும் மாற்றி அறிவிப்பது போல சிலிண்டர் விலையை மாதம் ஒரு முறை மாற்றி அமைக்கும்.
அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்தது. இதனால் , சிலிண்டரின் விலை ரூ.36 குறைத்துள்ளது. கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ஒன்று விலை ரூ.2,045க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது விலை குறைக்கப்பட்டதை அடுத்து ரூ.2009க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அதே நேரத்தில் சமையலுக்குப்பயன்படுத்தப்படும் வீட்டு உபயோக சிலிண்டர் விற்பனையில் எந்த ஒரு மாற்றமும் இன்றி அதே விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. இதனால் இல்லத்தரசிகளுக்கு இது ஏமாற்றம்தான்!.
அதே போல கச்சா எண்ணெய் விலை வீழ்ந்ததால் பெட்ரோல் டீசல் விலையில் இதுவரை எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த 132 நாட்களாக என்ன விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றதோ அதே விலையில் பெட்ரோல் ரூ.102.63க்கும் , டீசல் லிட்டர் ரூ.94.24 க்கும் விற்பனை செய்து வருகின்றது.