fbpx

சாதாரண காய்ச்சல் vs டெங்கு காய்ச்சல்..!! எப்படி நீங்களே கண்டறிவது..? சிகிச்சைகள் என்ன..?

இந்தியர்கள் பலரும் டெங்கு மற்றும் வைரல் காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக வைரஸ் காய்ச்சல்கள் ஆண்டு முழுவதும் நம்மை தாக்கக்கூடியது. ஆனால், டெங்கு காய்ச்சல் பருவமழை காலங்களில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) தான் அதிகமாக பரவும். எனினும் மழை, வெப்பநிலை, கொசு உற்பத்தியாகும் சூழல் ஆகியவற்றை பொறுத்து மாறுபட வாய்ப்புள்ளது. சாதாரண வைரஸ் காய்ச்சலுக்கும் டெங்கு காய்ச்சலுக்கும் உள்ள வித்தியாசத்தை அவ்வுளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால், இரண்டுமே ஒரே மாதிரியான அறிகுறிகளையே வெளிப்படுத்தும்.

அதிகமான காய்ச்சல் (102 டிகிருக்கும் மேல்), தலைவலி, உடல் வலி, தசைகளில் வலி, சோர்வு, குமட்டல், இருமல், தொண்டை வறட்சி போன்றவை இவற்றின் அறிகுறிகளாகும். ஆனால், டெங்கு காய்ச்சலின் போது சில அறிகுறிகள் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதோடு தீவிரமாகவும் இருக்கும். ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் வந்தால் தீவிர மூட்டு மற்றும் தசை வலி, கண்களின் பின்புறத்தில் வலி, மூக்கு மற்றும் ஈறுகளில் ரத்தம் கசிவது, எளிதில் சிராய்ப்புகள் வருவது, உடலில் சிவப்பு நிறத்தில் புள்ளிகள் அல்லது அரிப்புகள் தோன்றுவது போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். ரத்த பரிசோதனையின் போது நமது பிளேட்லெட்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்படும்.

குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

டெங்கு காய்ச்சலை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. குறிப்பாக குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். ஆரம்பத்திலேயே நோயை கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் உடனடியாக குணமாகலாம். உங்கள் குழந்தைகளிடத்தில் வித்தியாசமான அறிகுறிகள் ஏதாவது தெரிகிறதா எனப் பாருங்கள். அவர்களின் உடல் வெப்பநிலையை அடிக்கடி கண்காணித்து வாருங்கள். முக்கியமாக நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

குழந்தைகளின் நீர்ச்சத்து குறையாமல் இருக்க தண்ணீர், நீராகரங்கள், எலக்ட்ரோலைட் நிறைந்த பானங்கள், இளநீர், பழ ஜூஸ்களை அடிக்கடி குடிக்க கொடுங்கள். ஒருவேளை உங்கள் குழந்தைக்கு வாந்தியோ வயிற்றுப்போக்கோ இருந்தால், இவை உடலில் நீரிழப்பை தடுக்க உதவும். டெங்கு காய்ச்சல் கொசுக்களின் மூலம்தான் பரவுகிறது. ஆகையால், உங்கள் வீட்டைச் சுற்றிலும் கொசுக்கள் உற்பத்தியாகாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் நோய் பரவலை தடுக்க முடியும். கூடுமானவரை உங்கள் குழந்தை வீட்டின் உள்ளே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டு ஜன்னல்களில் கொசு வலை, திரை மற்றும் பூச்சி விரட்டிகளை பயன்படுத்துங்கள். இது கொசுக்கடியில் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாக்கும்.

Read More : இந்து சமய அறநிலையத்துறையில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Chella

Next Post

"என்னுடைய நடனத்தை பார்த்து மகிழ்ந்தேன்.." - வைரலான நடன வீடியோவுக்கு பிரதமர் மோடி பதிலளித்தார்!!

Tue May 7 , 2024
சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி நடனமாடுவது போன்ற அனிமேஷன் வீடியோ சமீபத்தில் வைரலானது. அந்த வீடியோவிற்கு பதில் அளித்துள்ள பிரதமர் மோடி, நடன வீடியோவை பார்த்து நானும் மகிழ்ந்தேன் என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவில், “உங்கள் அனைவரையும் போலவே நானும் நடனமாடுவதைப் பார்த்து மகிழ்ந்தேன். உச்சக்கட்ட வாக்கெடுப்பு சீசனில் இத்தகைய படைப்பாற்றல் உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது!” என பதிவிட்டிருந்தார். மேலும் அந்த […]

You May Like