fbpx

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இன்றுடன் நிறைவு..! பதக்கப் பட்டியலில் இந்தியா பெற்ற இடம் என்ன?

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், பதக்கப் பட்டியலில் எந்தெந்த நாடுகள் முன்னிலையில் உள்ளன என்பதை பார்க்கலாம்.

22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலே பதக்க வேட்டை நடத்தி வருகிறது. அந்த அணி, 65 தங்கம், 54 வெள்ளி, 53 வெண்கலம் என மொத்தம் 172 பதக்கங்களை வென்று முதலிடத்தில் நீடிக்கிறது. அடுத்தப்படியாக போட்டியை நடத்தும் இங்கிலாந்து, 56 தங்கம், 59 வெள்ளி, 52 வெண்கலம் என 167 பதக்கங்களை வென்றுள்ளது. கனடா 24 தங்கம், 32 வெள்ளி, 34 வெண்கலம் என 90 பதக்கங்களை வென்று 3-வது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி, 19 தங்கம், 12 வெள்ளி, 17 வெண்கலம் என 48 பதக்கங்களை வென்றுள்ளது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இன்றுடன் நிறைவு..! பதக்கப் பட்டியலில் இந்தியா எந்த இடம்?

இதனைத் தொடர்ந்து இந்தியா 18 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலப் பதக்கங்களை வென்று 5ஆவது இடத்தில் உள்ளது. கடைசி நாளான இன்று 5 தங்கப்பதக்கத்திற்கான போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.

Chella

Next Post

#Covid 19: 16,167 பேருக்கு புதியதாக கொரோனா வைரஸ் பாதிப்பு..‌.! உயிரிழப்பு எண்ணிக்கை எவ்வளவு...?

Mon Aug 8 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 16,167 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 41 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 19,998 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
மக்களே..!! கொரோனா அறிகுறி இருந்தால் இனி என்ன நடக்கும் தெரியுமா..? வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!

You May Like