fbpx

போலீஸ் தாக்கி உயிரிழந்தவரின் மனைவிக்கு இழப்பீடு ….. ரூ.5 லட்சம் அளிக்க தமிழக அரசுக்கு ஆணை

போலீஸ் தாக்கியதில் உயிரிழந்தவரின் மனைவிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் .இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் போலீசார் சில வழக்குகளின் கீழ் அவரை கைது செய்தனர். இந்நிலையில் அவர் திடீரென மரணமடைந்தார். முருகனின் இறப்புக்கு காரணம் போலீசார் அவர் மீது தாக்கியதுதான் என கூறி உறவினர்கள் போராடடம் நடத்தினர். இதையடுத்து மனித உரிமைகள் ஆணையம் வழக்குப் பதிவு செய்தது.‘.

இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.  ஆய்வாளர் , உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் ஆகிய 6 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரை செய்தது. இதனால் பாதிக்கப்பட்ட அவரது மனைவிக்கு ரூ.5 லட்சம் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு  உத்தரவிட்டது.

Next Post

இந்தியாவை பா.ஜ.க.வால் பிளவுபடுத்தமுடியாது... ராகுல்காந்தி கன்னியாகுமரியில் உரை...

Wed Sep 7 , 2022
இந்தியாவை யாராலும் பிளவுபடுத்த முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில்  காங்கிரஸ் கட்சியினரின் பாரத் ஜோடோ யாத்திரை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அக்கட்சியின் முன்னாள் தலைவர் உரையாற்றினார். அவர் கூறுகையில், ’’ தேசியக்கொடி என்பது சாதாரண துணி அல்ல, 3 வர்ணக் கொடி மட்டுமல்ல , சக்கரம் மட்டும்அல்ல அதைக் காட்டிலும் மிகவும் மேலானது. இந்தக் கொடி நம் கைகளுக்கு சாதாரணமாக வரவில்லை. […]

You May Like