fbpx

மது அருந்துவதில் நண்பர்களிடையே போட்டி!… விளையாட்டால் விபரீதமாக பறிபோன உயிர்!… உத்தரப்பிரதேசத்தில் சோகம்!

உத்தரப் பிரதேசத்தில் யார் அதிகமாக மதுபானம் அருந்துவது என்று நண்பர்களிடையே நடைபெற்ற போட்டியில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா நகரை சேர்ந்தவர் ஜெய்சிங், இவர், தனது நண்பர்களான கேஷவ், போலா ஆகியோருடன் மருந்து அருந்த சென்றதாக தெரிகிறது. அப்போது, 10 நிமிடங்கள் 3 பாட்டில் மதுவை அருந்தவேண்டும் என்று போட்டி நடைபெற்றதாகவும் மேலும், இந்த போட்டியில் தோல்வியடைந்தவர்கள், மதுபானத்துக்கான செலவை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் நண்பர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஜெய்சிங் மது அருந்தியுள்ளார். ஆனால், அதிகமாக மது அருந்தியதன் காரணமாக அவர் சுயநினைவை இழந்தநிலையில் கிடந்துள்ளார். இதனை கண்ட அவரது மகன், ஜெய்சிங்கை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளார். அப்போது, ஜெய்சிங் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜெய்சிங்கின் நண்பர்களான கேஷவ், போலா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Kokila

Next Post

அதிர்ச்சி தரும் செய்தி.‌‌.! பிரபல நிறுவனம் 4% ஊழியர்களை மொத்தமாக பணி நீக்கம் செய்து உத்தரவு...!

Thu Feb 16 , 2023
ஸ்பிரிங்க்ளர் நிறுவனம் 4% ஊழியர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. தற்போதைய பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில், அமெரிக்காவை தளமாகக் கொண்ட மென்பொருள் நிறுவனமான ஸ்பிரிங்க்ளர் அதன் உலகளாவிய பணியாளர்களில் சுமார் 4 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. நிறுவனம் கடந்த வாரம் பணிநீக்க வேலைகளை தொடங்கியது. இந்தியா, அமெரிக்கா மற்றும் பிற பிராந்தியங்களில் அதன் […]

You May Like