fbpx

NTK: நாம் தமிழர் கட்சியிடமிருந்து பறித்த கரும்பு விவசாயி சின்னத்தில் 40 தொகுதிகளில் போட்டி..!

நாம் தமிழர் கட்சியிடமிருந்து கரும்பு விவசாயி சின்னத்தைப் பறித்த ‘பாரதிய பிரஜா ஐக்கியதா’ கட்சி மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு- புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவிப்பு.

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, 2016 சட்டமன்றத் தேர்தலில் மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டது. அதன்பிறகு நடந்த 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது. இந்நிலையில், வரும் மக்களவை தேர்தலில் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி, தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. எனினும் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என சீமான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்தார். வழக்கில், முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் பாரதீய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.

இதனையடுத்து, டெல்லி உயர் நீதிமன்றம், சீமான் மனுவை தள்ளுபடி செய்தது. நாம் தமிழர் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் கரும்பு விவசாயி சின்னத்தைப் பறித்த ‘பாரதிய பிரஜா ஐக்கியதா’ கட்சி மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு- புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

Vignesh

Next Post

Ration: வரிசையில் நிற்க அவசியம் இல்லை...! இனி வீட்டில் இருந்தே ரேஷன் பொருட்களை பார்க்கலாம்...!

Thu Mar 14 , 2024
ரேஷன் கடையில் உள்ள உணவு பொருட்களின் இருப்பை பதிவு செய்த மொபைல் போன் எண்ணில் இருந்து எஸ்எம்எஸ் அனுப்பி தெரிந்துக் கொள்ளலாம். தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் ஒரே தவணையாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஊழியர்கள் அதனை பின்பற்றாமல் அரிசி தனியாக, சர்க்கரை தனியாக வழங்குவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. இதனை தடுக்க TNePDS செயலி உள்ளது. மக்கள் […]

You May Like