சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சதாசிவம் உள்ளார். இவரது மகன் சங்கருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு சேலம் அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டியைச் சேர்ந்த மனோலியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. தற்போது தம்பதிக்கு ஒன்றைரை வயதில் பெண் குழந்தை இருக்கும் நிலையில் மனோலியா சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது கணவர் சங்கர், மாமனார் சதாசிவம், மாமியார் பேபி, நாத்தனார் கலைவாணி ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துவதாக கூறியிருந்தார்.
இதனையடுத்து மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவம் உள்ளிட்ட நான்கு பேர் மீது 6 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சதாசிவம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவிற்கு சேலம் மாநகர போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர். மேலும் மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவத்திற்கு வரதட்சணை புகார் வழக்கில் காவல்துறை சம்மன் அனுப்பியதையடுத்து சூரமங்கலம் காவல்நிலயத்திற்கு நேரில் சென்று சம்மனை பெற்றுக்கொண்டார் எம்எல்ஏ சதாசிவம்