fbpx

ஓர் ஆண்டில் வருமானம் மட்டும் ரூ.680 தான்…! மத்திய அமைச்சருக்கு எதிராக வழக்கு…!

மத்திய அமைச்சரின் ஓர் ஆண்டு வருமானம் ரூ.680 என தெரிவித்துள்ளார்.

மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் 2021-22-ம் நிதியாண்டில் தனது வருமானம் ரூ.680 என வேட்புமனுவில் தெரிவித்துள்ளது குறித்து தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசி தரூரை எதிர்த்து போட்டியிடுகிறார்.

மேலும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தனது சொத்துக்களை மறைத்ததாகக் குற்றம்சாட்டி உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் பெங்களூரைச் சேர்ந்த ஒருவரும் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர். அவரது வேட்புமனுவை உடனடியாக நிராகரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். பிரமாண பத்திரத்தில் சொகுசு வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் குறிப்பிடப்படாததால், பங்குகளை மிகக் குறைவாக மதிப்பிட்டுள்ளதால் முரண்பாடுகள் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

2018 ராஜ்யசபா தேர்தலில் கர்நாடகாவில் போட்டியிட்ட சந்திரசேகர் தனது சொத்து ரூ.65 கோடி என அறிவித்தார், அதுவும் சர்ச்சையானது. அதே போல 2006 மற்றும் 2012 இல் ராஜ்யசபா தேர்தலில் முறையே ரூ.25 கோடி மற்றும் ரூ.37 கோடி மதிப்பிலான சொத்துக்களை அறிவித்தார். 3 முறை காங்கிரஸ் எம்பியாக இருந்த சசி தரூரை எதிர்த்து போட்டியிடும் சந்திரசேகர் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

Vignesh

Next Post

இந்தியர்களை அச்சுறுத்தும் புரோஸ்டேட் புற்றுநோய்!… 2040-க்குள் பாதிப்பு இருமடங்காக அதிகரிக்கும்!... ஆய்வில் அதிர்ச்சி!

Sun Apr 7 , 2024
Prostate cancer: இந்தியாவில் 2040ஆம் ஆண்டுக்குள் புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருமடங்காக அதிகரித்து ஆண்டுக்கு சுமார் 71,000 புதிய பாதிப்புகள் இருக்கும் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் 33,000 முதல் 42,000 வரை புதிய பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன. உலகில் 2020 ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 14 லட்சமாக இருந்த புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்புகள் 2040 ஆம் ஆண்டளவில் ஆண்டுக்கு 29 லட்சமாக இருக்கும். இதையடுத்து, குறைந்த மற்றும் […]

You May Like