அண்ணாமலையால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் விலகி இருக்கும் நிலையில், பாஜகவில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ”பாஜகவில் இருந்து விலகும் முடிவை கனத்த இதயத்துடன் எடுக்கிறேன். இந்த முடிவை எடுக்க காரணம் அண்ணாமலை தான். அண்ணாமலையின் தலைமைக்கு கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அண்ணாமலை பற்றி நான் இனி கவலைப்பட மாட்டேன். அண்ணாமலை ஒரு மலிவான தந்திரமான பொய்யர் மற்றும் தர்மத்திற்கு எதிரான தலைவர். அண்ணாமலை மீது காவல்துறையில் புகார் அளிக்க தயாராக உள்ளேன். பெண்களுக்கான சமஉரிமை மற்றும் மரியாதை தராததால் தமிழ்நாடு பாஜகவிலிருந்து விலகுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், நாயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் திமுகவில் இணைய உள்ளதாக பேச்சு அடிப்பட்ட நிலையில், காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் பாஜகவில் இருந்து விலகியுள்ளனர். தனது ஆதரவாளர்களை முக்கிய பொறுப்புகளில் நியமிப்பது, மத்திய அமைச்சர் எல்.முருகனின் ஆதரவாளர்களை ஒதுக்குவது என அண்ணாமலை மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ளது. இதற்கிடையே, வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் பாஜகவை சீர்படுத்த டெல்லி தலைமை முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால், அண்ணாமலையின் தலைவர் பதவிக்கு ஆபத்து வந்துள்ளது.