வெளிநாடுகளில் இறக்குமதி செய்யும், புற்றுநோய் உள்ளிட்ட அரியவகை நோய்களுக்கான மருந்துகளுக்கு மத்திய அரசு முழுமையாக வரி விலக்கு அளித்துளது.
அரிய வகை நோய்களுக்கான மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு முழுமையான வரிவிலக்கு அளித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.. புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ‘பெம்ப்ரோலிசுமாப்’ உள்ளிட்ட மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான முழுமையான வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு, இறக்குமதி வரி வசூலித்து வரும் நிலையில், அரியவகை மருந்துகளுக்கான இறக்குமதி வரிக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது..
இந்நிலையில் புற்றுநோய் உட்பட அரியவகை நோய்களுக்கான மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது முழுமையான வரி விலக்கு அளித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.. இந்த முழு வரி விலக்கை பெறுவதற்கு, பயனாளிகள் குறிப்பிட்ட மாவட்ட அல்லது மத்திய அரசு சுகாதார அதிகாரிகளிடம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. உரிய மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்கும் பட்சத்தில் முழு வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது..