துாத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
கடந்த 3 நாட்களுக்கு முன் தென் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் நிவாரண முகாம்கள் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகள் தயார் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மறவன் மடத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள், தங்களை சந்திக்க வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கதறி அழுது குறைகளை தெரிவித்தனர். பின்னர், ”மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும். வெள்ள நீரை அகற்ற அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.