fbpx

மார்ச் 31-க்குள் இந்த பணிகளை முடித்துவிடுங்கள்.. இல்லை எனில் அபராதம் செலுத்த நேரிடும்..

வரும் மார்ச் 31-ம் தேதியுடன் 2022-23 நிதியாண்டு முடிவைடகிறது… எனவே மார்ச் மாதம் பல நிதி தொடர்பான பணிகளுக்கான கால அவகாசமும் முடிவடைய உள்ளது.. இந்த காலக்கெடுவுக்குள் அந்த பணிகளை முடிக்கவில்லை எனில், அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.. அல்லது பிற விளைவுகளை சந்திக்க வேண்டும். இந்த மார்ச் 31, 2023க்குள் முடிக்க வேண்டிய சில முக்கியமான பணிகள் குறித்து தெரிந்துகொள்வது அவசியம்..

பான்-ஆதார் இணைப்பு: மார்ச் 31, 2023க்குள் உங்கள் பான் எண்ணுடன் கட்டாயம் ஆதாரை இணைக்க வேண்டும் என்று வருமான வரித் துறை எச்சரித்துள்ளது.. இந்த காலக்கெடுவிற்குள் பான் ஆதாருடன் இணைக்கப்படாவிட்டால், ஏப்ரல் 1 ஆம் தேதி பான் அட்டை செயலிழந்துவிடும். மேலும் பான் எண்ணை ஆதாருடன் இணைக்க தவறிய நபர்கள் அபராதமாக ரூ.1,000 செலுத்த வேண்டும்.

முன்கூட்டிய வரி செலுத்துதல்: ஐ-டி துறையின் படி, முன்கூட்டிய வரி செலுத்துதலின் (Advance Tax Payment) இறுதி தவணை மார்ச் 15, 2023 அன்று செலுத்தப்படும். ஆனால் அன்றைய தினம் ஏதேனும் வங்கி மூடப்பட்டிருந்தால், வரி செலுத்துவோர் அடுத்த வேலை நாளில் முன்கூட்டிய வரி செலுத்த வேண்டும். ஒருவேளை இந்த முன்கூட்டியே வரி செலுத்தத் தவறினால், வரி செலுத்துபவர் 1961 இன் வருமான வரிச் சட்டத்தின் பிரிவுகள் 234B மற்றும் 243Cன் கீழ் அபராதங்களைச் சந்திக்க நேரிடும்.

வரி-சேமிப்பு முதலீடுகள்: 2022-23 நிதியாண்டுக்கான வரி-சேமிப்பு முதலீடுகளுக்கான (Tax-Saving Investments) காலக்கெடு மார்ச் 31, 2023 ஆகும். வரித் திட்டமிடல் வரிப் பொறுப்பைக் குறைத்து அதிக பணத்தைச் சேமிக்க உங்களை அனுமதிக்கிறது. இதன் விளைவாக, கணிசமான தொகையைச் சேமிக்க, கிடைக்கும் வரிச் சேமிப்பு விருப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே, வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C அல்லது 80Dன் கீழ் பலன்களைப் பெற நீங்கள் எந்த முதலீடும் செய்யவில்லை என்றால், மார்ச் 31-ஆம் தேதிக்குள் அதைச் செய்ய வேண்டும். நடப்பு நிதியாண்டில் செய்யப்படும் முதலீடுகள் வரி விலக்குகளுக்கு மட்டுமே பரிசீலிக்கப்படும்.

PMVVY திட்டம் : பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (Pradhan Mantri Vaya Vandana Yojana – PMVY என்பது மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பை வழங்கும் ஒரு ஓய்வூதிய திட்டமாகும். எல்.ஐ.சி இந்த ஓய்வூதியத் திட்டத்தை ஓய்வூதியத்திற்குப் பிந்தைய நிதித் திட்டமிடலுக்கான காப்பீட்டாளரின் தேவையைப் பூர்த்தி செய்ய வழங்குகிறது. ஒரு மூத்த குடிமகன் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டங்கள் மார்ச் 31, 2023 வரை ஏற்றுக்கொள்ளப்படும். 10 ஆண்டுகளுக்கு PMVVY திட்டம் 7.4 சதவீத வட்டி விகிதத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இந்த திட்டத்தின் கிழ் மாதந்தோறும், காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் சந்தாதாரர் ஓய்வூதியம் பெறலாம்.

Maha

Next Post

தமிழகமே...! கோடை காலத்தில் மின் தடை இருக்காது....! செந்தில் பாலாஜி அதிரடி உத்தரவு...!

Wed Mar 8 , 2023
கோடைகாலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழ்நாட்டின் அதிகபட்ச மின் நுகர்வு 17,584 மெகா வாட் ஆக கடந்த 4-ம் தேதி பதிவாகியுள்ளது. இந்த அளவு கடந்த ஆண்டில் இதே நேரத்தில் பதிவான 17,563 மெகா வாட்டை விட 21 மெகா வாட் கூடுதலாகும். இந்த கூடுதலான மின் நுகர்வையும் […]
’உங்க வீட்ல கரண்ட் பில் அதிகமா வருதா’..? இதை செய்தாலே பாதி பணத்தை மிச்சம் செய்யலாம்..!!

You May Like